கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். அதாவது விளங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் விளங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ராணி வேட்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், பாஜக சார்பில் நந்தினியும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெமினியும் வேட்பாளராக நியமிக்கப்பட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றதால் விளவங்கோட்டில் மீண்டும் காங்கிரஸ் வெற்றியை தக்க வைத்துள்ளது.