தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகிறார்கள்.  அதன் அடிப்படையில் விஜய்யும் மாநாடு நடத்தியுள்ளார். விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றால், அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது.  அதன் அடிப்படையில் விஜய் பேசியுள்ளார். சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும். திமுகவில் கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கையை கொண்டவர்களா? என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.