தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் ஆபாசமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பாலியல் தொழிலாளி பெண்களின் உடலுறவை சைவம் மற்றும் வைணவ மதங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசிய நிலையில் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு வழக்கு பதிவு செய்யாவிட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதனால் அமைச்சர் பொன்முடி மீது தக்க நடவடிக்கை இந்த வழக்கில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.