நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மீண்டும் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியதோடு நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரமே இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது மீண்டும் நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் அதனுடைய வினாத்தாள் முன்கூட்டியே இணையத்தில் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அதோடு இந்த வினாத்தாள்களை ‌ரூ.70,000 வரை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் whatsapp மற்றும் telegram போன்ற சேனல்களின் குரூப்புகளில் நடைபெற்ற சாட்டுகளின் ஸ்க்ரீன் ஷாட்டை Neet PG Leeked Meterials என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் பரப்புவதாக கூறப்படுகிறது.