தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரோகினி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சிபிஎம் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதாவது பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் ஊர்வலம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு முன் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் நடிகை ரோகினி இந்த ஊர்வலத்தை நடத்தியுள்ளார். மேலும் இதன் காரணமாக நடிகை ரோகினி உட்பட ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.