தமிழக பாஜகவில் கடந்த வருடம் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு இணைந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பாஜக கட்சியின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதைதொடர்ந்து அவர் பாஜகவுக்காக பணியாற்றி வரும் நிலையில் அவருடைய மனைவி ராதிகாவும் பாஜகவுக்காக பணியாற்றி வருகிறார். ஒருபுறம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கும் சரத்குமார் தயாராகி வருவதோடு பாஜக சார்பில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஒரு வருடமாக பாஜகவில் சரத்குமாருக்கு புதிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவருக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற பாஜக புதிய தலைவர் பதவி ஏற்ப விழாவில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அறிவித்தார். அதன்படி பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக நடிகர் சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதே போன்று தலைவர் பதவியிலிருந்து விடுபட்ட அண்ணாமலை, எச் ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கரு நாகராஜன் உள்ளிட்டோருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.