
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் வைத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தென் மாநில எம்பிக்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டுக் குழு அமைப்பது தொடர்பாக தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
திமுக எம்பி தயாநிதிமாறன், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் புவனேஸ்வரத்தில் உள்ள நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான தென் மாநில எம்பிக்கள் கூட்டுக் குழுவுக்கு பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை கோரியுள்ளனர்.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.