பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டிறைச்சி குழப்பம் மற்றும் பன்றி இறைச்சி மற்றும் மீன் எண்ணெய் போன்றவைகள் சேர்க்கப்பட்டதாக ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் இந்த முறைகேடு நடந்ததாக கூறியுள்ளார். இந்த விவகாரத்திற்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்திடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்ட நிலையில் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது தரம் குறைவாக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் சேர்ந்த ‌AR Dairy நிறுவனத்திற்கு தடை விதித்ததாக கூறியுள்ளார். அதோடு இது தொடர்பான அறிக்கையை ஆந்திர முதல்வரிடம் சமர்ப்பித்து விட்டதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. அதோடு நெய்யை சோதனை செய்ததில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த நிறுவனத்திற்கு தடை விதித்து விட்டதாக கூறினார். இதற்கிடையில் மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா திருப்பதி லட்டு விவகார சர்ச்சை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உத்தரவு போட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக FSSAI மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.பி நட்டா உறுதி கொடுத்துள்ளார்.