தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் தற்போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்ததோடு பல்வேறு பகுதிகளில் இருந்து, இரவு பகல் பாராமலும், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமலும் மாநாட்டுக்கு கலந்து கொண்ட நிலையில் உங்களின் அனைவரின் கஷ்டமும் அன்பும் எனக்கு புரிகிறது.

இந்த மாநாட்டை வெற்றி பெறமாக நடத்த உதவி அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு இனி 2026 என்ற இலக்கை நோக்கி தமிழக மக்களின் நலனுக்காக உடைப்பதை மட்டுமே நாம் அரசியல் நோக்கமாக கொண்டு செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் கட்சி ஆரம்பிப்பதாக சொன்ன போதிலே நம்மை விமர்சித்த பலர் தற்போது முதல் மாநாடு நடந்து முடிந்ததால் இன்னும் விமர்சிப்பார்கள். அதில் தேவையான வற்றை மற்றும் மனதில் வைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கடந்து செல்வோம். இனி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பது மட்டுமே நம் எண்ணம் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.