
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தாயை பார்க்க முதலமைச்சர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.