
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணி மற்றும் இந்தியாவின் திடமான பதிலடி நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு உரையாற்றினார். இந்த உரையின் பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சாம்பா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டம் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன்கள் வந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
#UPDATE: After the first wave of drone activity and Air Defence fire. Now, No drone activity observed for the past 15 minutes in Samba. https://t.co/wsJnadZGvx
— ANI (@ANI) May 12, 2025
மேலும், பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தின் தாஸுவா பகுதியில், மக்கள் 7 முதல் 8 வெடிகுண்டு சத்தங்களை கேட்டதாக கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்திய விமான பாதுகாப்பு படைகள் சாம்பா பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தன.
பாதுகாப்புத் துறையினர் தெரிவித்ததாவது, “பாகிஸ்தானின் ட்ரோன் நடவடிக்கைகள் மிகக் குறைவாக இருந்தன. அனைத்தும் முறையாக தடுக்கப்பட்டுள்ளன. தற்போது எந்தவித அச்சமும் இல்லை” என உறுதியளித்துள்ளனர்.