சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலாங்குளம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக கட்சியின் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று இன்று காலை கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கட்சியின் வார்டு செயலாளரும் புதுச்சேரியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்தடுத்த இப்படி படுகொலை சம்பவங்கள் நடைபெறுவது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியதுள்ளது.