
மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் தக் லைப் திரைப்படம் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தக் லைப் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவின் போது தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகாவில் நாளை தக் லைப் திரைப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது.
இன்று தக் லைப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடிகர் கமலஹாசன் எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி. மேடையில் உயிரே, உறவே, தமிழே என பேசியதின்முழு அர்த்தத்தையும் இப்போது உணர்கிறேன்
என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.