இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கும். பொதுவாக இன்றைய தினம் மாலை முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். வரவேற்கும் 2025-வது புத்தாண்டை உலகமே கொண்டாட தயாராகி வருகிறது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

இந்திய நேரப்படி சற்று முன் 4.40 மணிக்கு நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி. அங்கு மக்கள் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. அதனை மக்கள் கண்டு ரசித்தனர்..