மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் என்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சியினர் பட்ஜெட் குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, 2025 – 26 மத்திய பட்ஜெட் உப்பு சப்பில்லாத பட்ஜெட், ஏமாற்றம் தரும் பட்ஜெட். தனி நபர் வருமான வரி மட்டும் தான் உயர்ந்துள்ளது, மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள், ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை, புதுச்சேரி மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.