உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நாளை (நவ. 24) பதவியேற்க உள்ளார்.
இவர், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய 370-வது பிரிவு ரத்து, பிகார் ரீப் (Bihar Reep), மற்றும் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளித்து, தேசிய அளவில் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
