
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்றத்தின் 51- வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.