இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இன்று ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அதாவது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் இன்று 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஸ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக இன்று விசாரணை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.