விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவும், அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனாவிற்கு தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து அரசியல் வியூகங்களை பின்பற்றி தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மை பணிகளை மேற்கொள்வார் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.