பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்புகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை (வெள்ளிக்கிழமை), சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9-ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.