நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாரை கிணறு பகுதியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் அவரது சகோதரர் மணிகண்டன் இரண்டு பேரும் சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் கார் பழுது பார்க்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது காருக்குள் முன் பகுதியில் இருந்து 4 அடி நீளமுள்ள பாம்பு வெளியே வந்ததை பார்த்து மணிகண்டனும், ராஜேந்திரனும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாம்பை பிடிக்க முயன்றனர். பல பாகங்களாக பிரித்து தண்ணீரை பீய்ச்சி பார்த்தும் பாம்பு சிக்கவில்லை. நீண்ட நேரமாக போராடியும் தீயணைப்புத் துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.