திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று காலை அடிவாரம் வடக்கு விரிவீதியில் பக்தர்கள் நடந்து சென்றனர். அப்போது கிரி வீதியில் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்ததும் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு எட்டு அடி நீளமுள்ள சாரை பாம்பு. இதனையடுத்து பிடிபட்ட சாரைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.