சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் விரைவு பேருந்து போக்குவரத்துக் கழக நேர காப்பாளர் அறை உள்ளது. இது தற்போது பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் இந்த அறை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பயணிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நேர காப்பாளர் அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.