திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் சங்கிலி கரடு வனப்பகுதியில் வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் சவேரியார், ஆண்டி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலையில் டார்ச் லைட் கட்டியவாறு சுற்றித்திரிந்த நபரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் எத்தலப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்தது. இவர் முயலை வேட்டையாடுவதற்காக வனப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனையடுத்து பெருமாளுக்கு வனத்துறையினர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.