தமிழக அரசு குரூப் 4 தேர்வுகள் மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு துறைகளில் 3.5 லட்சம் என்ற அளவிற்க்கு காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் வருடத்திற்கு 10,000 பணியிடங்களை மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் அரசு நிரப்புவது வன்மையான கண்டனத்திற்குரியது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று கூறிவிட்டு தற்போது 10000 காலி பணியிடங்களை மட்டுமே திமுக அரசு நிரப்புகிறது.

வருடத்திற்கு 30 ஆயிரம் காலி பணியிடங்களையாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும். திமுக அரசு ஆட்சி பொறுப்பை என்றால் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி வருடத்திற்கு 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பி தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் தேர்வுகள் மூலமாக மட்டுமே நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்திக் கொள்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.