சிதம்பர நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் வேதங்கள் மற்றும் யாகங்கள் ஆகியவற்றை கற்ற பிராமணர்களின் பிரத்தியேக குழுவாகும். இவர்கள் நடராஜர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கோவிலின் அர்ச்சகராகவும் உரிமை பெறுகின்றனர். இந்நிலையில் இவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று கோவிலுக்கு செல்பவர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இந்த கோவிலின் தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார். அதில் தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கும் மேலானவர்களாக கருதி கொள்வதாகவும், மிகவும் ஆணவத்துடனும், கடுமையாகவும் பக்தர்களிடம் நடந்து கொள்வதோடு அவர்களை அவமானப்படுத்துவதாகவும்  ஐகோர்ட் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாது காசு கொடுக்காவிட்டால் விபூதி கூட கிடையாது என்று கூறும் அளவிற்கு அவர்களது அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றும் தெரிவித்த அவர் பக்தர்கள் வரும் வரை தான் அது கோவில் என்றும் கூறியுள்ளார்.