இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி 3 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைககான வட்டி விகிதங்களை 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி ஏழு நாள் முதல் 29 நாள் வரையிலான டெபாசிட்களுக்கு மூன்று சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.

அதனைப் போலவே 30 நாள் முதல் 45 நாட்களுக்கு 3.5 சதவீதம், 40 நாள் முதல் 60 நாட்கள் வரை 4.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. மேலும் பதினைந்து மாதங்களுக்கு குறைவான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.7 சதவீதமும், 15 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.