நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மதிவதனி, இன்னைக்கு நிறைய மாணவர்கள் வந்திருக்கிறீர்கள். பெரும்பாலும் எல்லாமே ஒன்று 2K கிட்ஸ்ஸா இருப்பீங்க ? இல்லனா 90ஸ் கிட் ஆக இருப்பீர்கள்.  எல்லோருக்கும் இன்னைக்கு என்னன்னா…  30 செகண்ட்  ரீல்ஸ்க்கு மேல ஒரு நிமிஷம் யாராவது பேசினால் ? என்ன பண்ணி விடுவோம்… ஸ்கிப் பண்ணிடுவோம்.

ஆனால் இன்னைக்கு  பேசக்கூடிய எந்த வார்த்தை…  ஒரு சொல் கூட வீணான வார்த்தையாக இருக்காது. எதையுமே ஸ்வைப் பண்ணாமல்,  நீங்க கேட்டாக வேண்டிய கட்டாயம். என்ன கட்டாயம் ? நாங்க தான் இன்னைக்கு ஒயிட் கோட் போட்டிருக்கிறோம். காலேஜில் படிகின்றோம்.  நாங்க இன்னைக்கு யூனிபார்ம் போட்டு இருக்கிறோம். அடுத்த டாக்டர் இல்லைனா…  என்ன ?

ஏதாவது ஒரு டிகிரி படித்துக் கொள்வோம். இதில் என்ன இருக்கிறது ?  நீட் எழுதணுமா ? கஷ்டப்படணுமா நாங்க எதை வேண்டுமானாலும்  படித்துக் கொள்வோம் என்ற எண்ணத்தில் மாணவர்கள் அமர்ந்திருக்கலாம். ஒன்னு மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மற்ற நாடுகளில் கல்வி வேணும் என்று சொன்னது… பொருளாதாரத்திற்காக.. பணத்திற்காக… காசுக்காக… வாழ்க்கை மேம்பாட்டிற்காக… அவர்களை உயர்த்திக்கொள்ள…

ஆனால் தமிழ்நாட்டில் கல்வி உரிமைக்காக பெரியாரும்,  சுயமரியாதை இயக்கமும் போராடியது நம்முடைய சுயமரியாதைக்காக….  மற்ற நாடுகளுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் அதுதான். இந்த கோட்டு போட்டிருப்பதும்,  யூனிபார்ம் போட்டிருப்பதும் சாதாரணமாக நிகழ்ந்தது அல்ல.  இன்னைக்கு மதிவதனி பிஎஸ்சி எம்எல் அப்படின்னு சொன்னால் ..?  எங்க அப்பா,  அம்மா சம்பாரிச்சாங்க..  நான் படிக்கிறேன் என்ற பொய்யை நாம் சொல்ல முடியாது.

2000 வருடமாக ஏதோ ஒரு வகையில் சம்பாதித்து இருப்பார்கள்.. ஏதோ ஒரு வகையில் காசு இருந்திருக்கும். ஏன் நமது தாத்தா, பாட்டி படிக்கவில்லை ? இங்கு இருக்கின்ற எத்தனை தாத்தா, பாட்டி படித்தார்கள் என்று கேட்டால் ? அரங்கத்தில் இருக்கக்கூடிய 10 பேர் கூட கை தூக்க  முடியாது. எத்தனை பேரோட அப்பா,  அம்மா படிச்சி இருக்காங்கன்னு கேட்டால் ?  50 பேருக்கு மேல் கை தூக்க மாட்டீர்கள். இன்னைக்கு நம்ம படிக்க வந்திருக்கிறோம்.

இதை பொறுத்துக்க முடியல. நமக்கான  அடையாளம் எதுவாக  இருந்தது ? ஜாதியை சொன்னார்கள்.. இது தெட்டி வீடு,  இது  வன்னார் வீடு,  துணி துவைக்கிறவங்க வீடு, முடி சவரம் செய்யுறவுங்க வீடு,  செரக்குறவுங்க வீடு,  இது விவசாயி வீடு, இது  கூலி தொழிலாளி வீடு என சொன்னாங்க. இன்னைக்கு  தமிழ்நாட்டின் டாக்டர் வீடு, இன்ஜினியர் வீடு, வக்கீல் வீடு, ஜஸ்டிஸ் வீடு, கலெக்டர் வீடு, என்று மாறியது திராவிட இயக்கம். தந்தை பெரியாருடைய கொள்கைகள்,  இதை பொறுத்துக்க முடியவில்லை என தெரிவித்தார்.