
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டிக்கு முன்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் முன், ரசிகர்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்தில் இரு ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கொடிகளை கொண்டு அடிக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வீடியோவில், அங்கிருந்த இருவரும் வெவ்வேறு அணிகளை ஆதரிக்கும் வகையில், கொடிகளை வைத்தே தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அருகிலிருந்த மற்ற ரசிகர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. போட்டி தொடங்குமுன் இவ்வாறு ரசிகர்களிடையே ஏற்படும் கலவரங்கள், கிரிக்கெட் விழாவை பாதிக்கக்கூடியதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் 2025 சீசனில், இதற்கு முந்தைய போட்டிகளிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் ஆகியோரை நேரில் சென்று பார்ப்பதற்காக ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்த சம்பவங்களும் ஏற்கனவே பதிவாகியுள்ளன.
இந்த வகையான பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் ரசிகர்களின் கட்டுப்பாடில்லாத செயல்கள், போட்டிகளின் ஒழுங்கையும், வீரர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளதாகவும், அதிகாரிகள் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.