
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாடகர் ராகுல் வைத்யா தொடர்பான இன்ஸ்டாகிராம் சர்ச்சை சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் அனுஷ்கா சர்மா மற்றும் ராகுல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ராகுல், அனுஷ்கா சர்மாவுக்காக ஒரு பாடலை பாடி அவரது அனுமதி இன்றி அவரது கையைப் பிடித்து முத்தமிடுகிறார். அந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர், இதற்குத்தான் விராட், ராகுலை பிளாக் செய்தார் என கருத்து தெரிவித்தனர்.
View this post on Instagram
இதே சமயத்தில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை அவ்னீத் கவுரின் இன்ஸ்டாகிராம் பதிவில் லைக் செய்து, பின்னர் விரைவில் அதை நீக்கி விட்டார். இருப்பினும் அவர் லைக் செய்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சில சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதற்கு விராட் கோலி அது இன்ஸ்டாகிராம் அல்காரிதம் கோளாறு. எனவே தேவையற்ற விஷயங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ராகுல், விராட் தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்தது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முன்னாள் கேப்டன் இன்ஸ்டாகிராம் அல்காரிதம் கோளாறு காரணமாக தான் தன்னை பிளாக் செய்திருக்க வேண்டும் என நகைச்சுவையாக பதிவிட்டார். தற்போது இது இரு ரசிகர்கள் இடையே சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.