இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மார்ச் 31-ஆம் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் உரிய கால அவகாசத்திற்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது தற்போது அத்தியாவசியமான ஒரு ஆவணமாக மாறி உள்ள நிலையில் அனைத்து விதமான ஆவணங்களுடனும் ஆதார் இணைக்கப்பட்டு வருவதால் தற்போது ரேஷன் கார்டுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.