நான் விஜய் விமர்சித்தேன் என்றும் சொல்வது பொய் இல்லையா ? 100% பொய். விஜய் அவர்களை நான் விமர்சிக்கவில்லை. அவர் அவருடைய மெர்சல் படத்தில் சொன்ன பொய்யை தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன்.

பாரத நாட்டில் ஆண்டு முழுக்க ஏழைகளுக்கு கல்வி இலவசம் அரசாங்க பள்ளிக்கூடம் சென்றால். நான் ஸ்டாலின் மகன் நடத்தும் பள்ளிக்கூடத்தில் தான் சேர்ப்பேன் என்றால் நீங்கள் 1 லட்சம் ரூபாய் பணம் கட்டி தான் ஆக வேண்டும். ஆனால் அரசு பள்ளிக்கூடத்தில் கல்வி இலவசம் தான்.

மருத்துவம் இலவசம். மலேசியா சிங்கப்பூர்ல நினைத்ததும் அட்மிட் ஆக முடியுமா ? முன்னாடியே பதிவு செஞ்சிருக்கணும். அங்கெல்லாம் இலவசமா இருக்கு இந்தியாவில் இலவசம் இல்லை என்ற பொய்க்கு எதிராக அறிக்கை கொடுத்தேன்.

நான் விஜய்க்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை. அந்த படத்தில் சொல்லப்பட்ட ஒரு பொய்யை தடுத்து நிறுத்தும் வகையில் அறிக்கை கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.