ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளும் அரசை எதிர்க்கட்சியினர் ஒருபோதும் பாராட்ட மாட்டார்கள். திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.