நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி விருப்ப மனு கூட வாங்காமல் இருந்த ஓபிஎஸ், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என திடீரென்று கூறி இருக்கிறார். ஒருவேளை ஓபிஎஸ்-ஐ போட்டியிட நீதிமன்றம் அனுமதியளித்தால், அவர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரின் நீக்கமும் செல்லாது என்று ஆகிவிடும். இதன் வாயிலாக அவர் அதிமுகவில் தொடர்வது உறுதியாகிவிடும். இந்த இடம் தான் EPS-க்கு ஓபிஎஸ் வைத்த முதல் செக்.

இதனிடையே அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வாதத்தை தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்றது. அதாவது, தனக்கென ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருவதாகவும் தங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாகவும் EPS தரப்பு குற்றம்சாட்டியது..