2022-23-க்கான வட்டி விகிதத்தை EPFO அறிவித்திருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது 2022-23-க்கான EPF வட்டி விகிதத்தினை அறிவித்தது. அதன்படி EPFO வைப்புகளுக்கு 8.15% வட்டி விகிதத்தினை நிர்ணயித்துள்ளது. முன்பாக EPFO 2021-2022-க்கான இபிஎப் மீதான வட்டியை 8.1 சதவீதம் ஆக குறைத்தது.

இது 4 தசாப்தங்களில் மிகக் குறைவான வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சுமார் 5 கோடி இபிஎஃப் சந்தாதாரர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1977-78 நிதி ஆண்டில் EPFO வட்டி விகிதமானது 8% ஆக இருந்தது. அதன்பின் 2021-2022 நிதி ஆண்டில்தான் இபிஎப் வட்டி விகிதம் இத்தனை குறைவாக இருந்திருக்கிறது.