இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் ஊழியர்களின் ஓய்வூதிய காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மாதந்தோறும் ஊழியர்கள் செலுத்தி வரும் தங்களுடைய சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டு எதிர்காலத்தில் மாதம்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த திட்டம் தொடர்பான ஊழியர்களின் புகார்கள் அனைத்தும் இபிஎப்ஓ வாரியத்தின் குறைதீர்ப்பு போர்டல் மூலமாக தீர்க்கப்படுகின்றன.

இதற்கு முதலில் இ பி எஃப் ஓ போர்டலில் தங்களுடைய குறைகளை ஊழியர்கள் பதிவு செய்ய வேண்டும். அதற்கு அதிகாரப்பூர்வ EPFiGMS  இணையதள பக்கத்திற்கு சென்று அதில் குறைகளை பதிவு செய்தல் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அங்கிருக்கும் நான்கு விருப்பங்களில் உங்களுக்கு பொருந்தக்கூடியதை கிளிக் செய்து உங்களுடைய தனிப்பட்ட UAN மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு விவரங்களை பெறுவதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக தோன்றும் திரையில் குறிப்பிடும் விவரங்களை பூர்த்தி செய்து பின்னர் விவரங்களை சரிபார்த்து ஓடிபி சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் பிறகு பயனர்களின் பாலினம் மற்றும் மாநிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வு செய்து pf கணக்கு எண்ணை கிளிக் செய்ய வேண்டும். இப்போது திறக்கும் திரையில் உங்களுடைய குறைகளை பதிவு செய்து புகார் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். இறுதியாக சேர் என்பதை கிளிக் செய்து சமர்ப்பி என்பதை தேர்வு செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய புகார் இ பி எஃப் ஓ வாரியத்திடம் பதிவு செய்யப்பட்டு விடும். இதற்கான நடவடிக்கை விவரங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.