கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற பகுதியில் எபினேசர்(44) வசித்து வந்துள்ளார் மின்வாரிய ஒப்பந்த பணியாளர். இவருக்கு சவுதிகா என்ற மனைவி உள்ளார்.
எபினேசர் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி இரவில் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து தகராறு செய்து தனது அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி ஓடினார்.

இதனை பார்த்த ஊர் மக்கள் அனைவரும் வெட்டுப்பட்ட எபினேசரை மீட்டு அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதை அறிந்து கதறிய எபினேசரின் மனைவி சவுதிகா பூதப்பாண்டி ஊரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இடைக்காடு பகுதியை சேர்ந்த ஜெனித்(22) என்பவரை கைது செய்தனர். குற்றவாளி ஜெனித்திடம் கொலை குறித்து விசாரணை நடத்திய போது கூறியதாவது, தனது தாயை மரியாதை குறைவாக , தகாத வார்த்தையில் பேசியதால் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். காவல்துறையினர் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.