தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது.

சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக மீண்டும் பாஜக அரசு அமைகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் இருந்த அரசு தோல்வி அடைந்து காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது  ராகுல் காந்தி ட்விட்டரில் X-இல் கருத்து தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – சித்தாந்தப் போர் தொடரும். தெலுங்கானா மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தெலுங்கானா கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். கட்சிக்காக உழைத்த, ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.