மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தர்மபுரி, நெல்லை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் முன்னணி வகித்து வருகின்றனர். தர்மபுரி தொகுதியில் போட்டுயிட்ட பாமகவின் சௌமியா அன்புமணி முதல் சுற்று முடிவில் முன்னிலை வகிக்கிறார்.

அதே போல நெல்லை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மற்றும் வினோஜ் செல்வம் ஆகியோரும் முன்னிலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.