
கனடாவில் செயல்படும் பிரேசர் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, 2024 காண சுதந்திர பொருளாதார அறிக்கையை வெளியிட்டது. சுதந்திரமான பொருளாதாரம் ஒரு நாட்டின் குறைவான கட்டுப்பாடு, சந்தை விலையை வழங்குபவரே நிர்ணயிப்பது, எந்தவிதமான முடிவுகளையும் அரசு குறிக்கிடாமல் செயல்படுவது போன்றவை சுதந்திரமான நாட்டுப் பொருளாதாரம் ஆகும். இந்த கணக்கெடுப்பில் 8.58 புள்ளிகள் பெற்று ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது.
8.55 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்தும், நான்காவது இடத்தில் நியூசிலாந்தும், ஐந்தாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. கடைசி இடத்தில் 3.02 புள்ளிகள் பெற்று வெனிசிலா இறுதியில் உள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூர் முதலிடத்தில் இருந்தது. இப்போது ஹாங்காங், சிங்கப்பூரை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது. இந்த அறிக்கையின் படி ஆசியாவின் மிகப்பெரிய நிதி அமைப்பாக ஹாங்காங் மாறியது.