அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், கற்றது கையளவு, கல்லாதது கணினி அளவு என்கிற வகையில் மெய்ஞானத்தோடு,  விஞ்ஞானத்தையும் வளர்த்த அரசு அண்ணன் எடப்பாடியார் அரசு. இரும்பை காய்சி உருக்கிடுவீர், ஏற்ற தொழில்கள் செய்திடுவீர் என்ற பாரதியின் வரிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொழில் வளர்ச்சி , சிறு குறு தொழில் மேம்பாடு, கைத்தறி – துணி நெய்தல் துறை வளர்ச்சி என்று துரைதோறும் வளர்ந்தது அஇஅதிமுக அரசு.

இன்று  கொள்ளையோ கொள்ளை என்று ஏழைகள் வயிற்றில் அடிக்கும் அரசு திமுக அரசு. சாதி சண்டை, சமய சண்டை,  ஊழல், லஞ்சம், கற்பழிப்பு, நீட் விலக்கு பொய் பிரச்சாரம்,  திருக்கோவிலில் முறையற்ற சுரண்டல் என்று எங்கு பார்த்தாலும் ஊழல். சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு,  பள்ளி கல்வி,  உயர்கல்வி, ஆதித்ராவிடர் – பிற்படுத்தப்பட்டோர்,  தொழிலாளர் நலன்,  சமூக நலன் என்று ஒவ்வொரு துறையும் வளர்ச்சி குறித்தும், மிகத் தீர்க்கமாக திட்டமிட்டு….

நடவடிக்கை மேற்கொண்டு,  திட்டம் தீட்டிய அரசு, திடமான அரசு அண்ணன் எடப்பாடியாரின் அரசு. இதோடு மட்டுமல்லாமல் உருளுகின்ற தேருக்கு அச்சாணி எப்படி முக்கியமோ,  அது போல அரசுக்கு அரசு அலுவலர்கள் – பணியாளர்கள் முக்கியம் என்பதை உணர்ந்து,  அவர்களுக்கு நல்லதே செய்த அரசு அண்ணனின் அரசு. அறநெறி முதற்றே அரசின் கொற்றமென்று அறம் சார்ந்த நிகழ்வுகளை  தந்த அரசு அதிமுக அரசு.

காந்தி வழியில், அம்பேத்கர் நெறியில், பெரியாரின் கொள்கையில், பாரதியாரின் சொல்லில், திருவிகா வின் செயலில், பாரதிதாசனின் சிந்தனையில், புதுமைகளைப் புகுத்தி…. புரட்சிகளை செய்து தமிழர்களின் வாழ்வை வளமாக்கிய அரசு எடப்பாடி அரசு.

E for Energy P for Power S for Success அம்மாவின் எனர்ஜியோடும்,  தொண்டர்களின் பவரோடும் இயக்கத்தை சக்சஸ் ஆக நடத்துகின்றவர் தான் எங்கள் அண்ணன் இபிஎஸ் அவர்களை பணிந்து வணங்குகிறேன்.  இந்த சிறப்புமிக்க பொன்விழா எழுச்சி மாநாட்டில் எனக்கு பேச வாய்ப்பளித்தமைக்காக அண்ணன் எடப்பாடியார் அவர்களின் பொற்பாதங்களில் எனது நன்றியை சமர்ப்பித்து விடைபெறுகிறேன்  என பேசி முடித்தார்.