
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று அமைந்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கு விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அமலாக்க பிரிவ காவல் துறையினர் நடத்திய சோதனைகள் 100 பைபர்ஸ் விஸ்கி அடங்கிய 11.5 கிலோ ஐஸ்கிரீமை பறிமுதல் செய்துள்ளனர்.
1 கிலோ ஐஸ்கிரீமுக்கு 60 மில்லி என்ற அளவில் விஸ்கி கலந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடையை நடத்துபவர் பற்றி விசாரணை செய்ததில் அவர் சரத் சந்திர ரெட்டி என்பது தெரியவந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்ட தயாகர் ரெட்டி மற்றும் ஷோபன் ஆகியோர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.