அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடந்த ஒரு அதிசய சம்பவம் உலகையே உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியில் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 10 வயது சிறுமியை, ட்ரோன் கேமராவின் உதவியுடன் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம், தொழில்நுட்பத்தின் வல்லமையை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது.

போலீசார் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இணைந்து சிறுமியை தீவிரமாக தேடி வந்த நிலையில், தெர்மல் இமேஜிங் கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்பம், அடர்ந்த காட்டுப் பகுதியில் மறைந்திருந்த சிறுமியை எளிதில் கண்டுபிடிக்க உதவியது. ட்ரோன் கேமராவில் சிறுமி தரையில் சுருண்டு கிடக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த சம்பவம், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ட்ரோன்கள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைஉணர்த்தியுள்ளது.