நம்மில் பலர் காஃபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் ஒரு புதிய ஆய்வின் தகவல் படி நான்-ஆல்கஹாலிக் ஃபேட் லிவர் டிசீஸ் அதாவது கல்லீரலில் சேரும் கொழுப்பால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இது கல்லீரலில் நார் வளர்ச்சி மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஆகிய விஷயங்களுக்கு வழிவகுக்கிறது. இப்புதிய நோய் குறித்த அடுத்த கட்ட ஆய்வுகள் போர்டுகலின் கொய்ம்ரா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட போது இந்த நோயை குணப்படுத்தும் தன்மை காபியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நோய் அளவிற்கு அதிகமாக மது அருந்துவதால் ஏற்படவில்லை. ஆனால் ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை முறை, உடற்பயிற்சியில் ஈடுபடாத நிலை, அதிகப்படியான செயற்கை உணவு சாப்பிடுதல் ஆகிய விஷயங்கள் இருக்கின்றது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கிறது. மேலும் கல்லீரலில் கொழுப்பு அதிகரிக்கின்றது.

ஆனால் காபியில் உள்ள கேஃபைன் பாலிதினால்கள் மற்றும் வேறு இயற்கை பொருள்கள் புதிய கல்லீரல் நோயை குணப்படுத்தும் என்று உறுதியாகி உள்ளது. எனவே சில நாட்களுக்கு மட்டும் கேஃபைன் அதிகம் மற்றும் குறைவாக இருக்கும் 2 வெவ்வேறு காப்பியை குடித்த சிலரின் சிறுநீரகத்தை பரிசோதனை செய்தபோது அதிக கேஃபைன் காபியை குடிக்காதவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து வருகின்றது. இதனால் காபியில் இருக்கும் கேஃபைன் கல்லீரலில் புதிய நோய்க்கு மருந்தாக அமைகிறது.