செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, காய்ச்ச மரத்தில் தான் கல்லடி படும் என்பார்கள். தமிழகத்தை பொறுத்த அளவில் ஒன்றிய அரசு நகர்த்துகின்ற காய் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்த ஆட்சி என்பதைப் போல்,  ஒரு பிம்பத்தை உருவாக்க முற்பட்டார்கள்.  நான் உங்களுடைய முதல் சந்திப்பிலேயே எடுத்து கூறியது போல் இந்துக்களுக்கு இந்து சமய அறநிலை துறை வரலாற்றில் இதுவரையில் செய்யப்படாத பல்வேறு சாதனைகளை செய்து வருகின்ற ஆட்சி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அமைந்திருக்கின்ற ஆட்சி என்பதற்கு பல்வேறு சாதனை பட்டியல்களை உங்களிடம் தெரிவித்து இருக்கின்றோம். அவர்கள் நினைத்தது நடைபெறவில்லை

என்பதற்காக…. பொறுப்பிலேயே,  உயர் பொறுப்பிலேயே இருக்கின்ற ஒருவர் ஒரு குற்றச்சாட்டை கூறுகின்ற போது ஆதாரப்பூர்வமாக  குற்றத்தை கூறினால்,  அந்த குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இருக்கின்றது.  வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையில்,  உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுவது நிச்சயம் கண்டிக்கத்தக்க ஒன்று. இந்து சமய அறநிலைத்துறை பொறுப்பேற்ற பிறகுதான் சுமார் 5500 கோடி ரூபாய் பெருமானம் உள்ள சொத்துக்களை மீட்டு எடுத்து இருக்கின்றோம்.

நீங்கள் வட மாநிலங்களில் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  100 கோடி, 200 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் என்று…  திருச்செந்தூரில் மாத்திரம் தனியார் பங்களிப்போடு 300 கோடி ரூபாய் அளவிற்கு இன்றைக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்த 15 திருக்கோயில்களில் முழுமையாக இந்த வரைவு திட்டத்தை பயன்படுத்தி உலகத்திலேயே இருக்கின்ற இறை அன்பர்கள் அனைவரும் பிரமிக்கின்ற வகையிலே தமிழகத்தின் திருக்கோவில்கள் உருவாக்கப்படும். என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.