சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வெளியில் ஒரு சாதாரண குடிசை வீடு போல் தெரியும் அந்த வீடு, உள்ளே நுழைந்தவுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலை போல் மாற்றமடைகிறது. பளிங்கு தரைகள், அழகான டைல்களுடன் கூடிய சுவர்கள், ஆடம்பரமான சோஃபா, மின்னும் சரவிளக்குகள், முழு குளிரூட்டும் வசதி மற்றும் தனிச்சாமான்களுடன் கூடிய சமையலறை ஆகியவை இந்த வீட்டை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. இது போன்ற வீடு வெளியில் இருந்து யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள் என்பதே அனைவரின் கருத்து.

 

 

View this post on Instagram

 

A post shared by Manoj Kumar (@manojbachan1234)

இந்த வீடியோவை @manojbachan1234 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்டுள்ளார். “ஏழை மக்களின் வீடு” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோக்கு தற்போது வரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. பல நெட்டிசன்கள் “நமக்கும் இப்படிப் ஒரு குடிசை வேண்டுமடா!” என கூறியுள்ளனர். சிலர், “ஏழைகள் இப்படி இருந்தா, பணக்காரர்கள் எப்படி இருப்பாங்க?” என ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ “ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்” என்பதற்கான நேரடி சான்றாக அமைந்துள்ளது.