உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் மனதை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தல்சந்த் அகர்வால் (35) என்ற நபர் தனது மனைவி ஜாங்கியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அரியானாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தல்சந்த், ஒரு நாள் வீட்டுக்கு வந்தபோது, மனைவி வீட்டு உரிமையாளருடன் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை பார்த்த தல்சந்த் மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த ஜாங்கி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் தல்சந்தை அடித்து தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மனமுடைந்த தல்சந்த், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து உருக்கமாகப் பேசியுள்ளார். “நான் கடந்த மூன்று நாட்களாக தற்கொலைக்கு முயற்சி செய்கிறேன், நீ ஒருமுறை பேசிருந்தால் நான் இப்படி செய்திருக்க மாட்டேன்… எனக்கு செய்த மாதிரி யாருக்கும் துரோகம் செய்யாதே” என்று கூறி கண்ணீர் மல்க அழைப்பை முடித்துள்ளார்.

பின்னர் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தல்சந்தின் சகோதரர் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார்மீது புகார் அளித்துள்ளார்.

ஆனால் ஜாங்கியின் குடும்பத்தினர், தல்சந்த் மதுபானம் அருந்தி விட்டு அடிக்கடி தாக்குவார் என்று போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது, வீடியோ கால் பதிவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.