உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு சமுதாய சுகாதார மையத்தில் (CHC) பணிபுரியும் மருத்துவர் ஒருவர், தான் கடமையில் இருக்கும் அறையிலேயே தனது காதலியுடன் நடனமாடிய வீடியோ வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அஃப்கர் சித்திக் என்று அடையாளம் காணப்பட்ட அந்த மருத்துவர், தனது ‘டியூட்டி ரூமிலேயே’ ஒரு பெண்ணுடன் இணைந்து, “தம் தம் மஸ்த் ஹை…” என்ற இந்திப் பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
शामली में सामुदायिक स्वास्थ्य केंद्र के ऊपरी मंजिल पर बने कमरे में डॉक्टर साहब का महिला के साथ डांस का वीडियो वायरल है,
CMO साहब ने डॉक्टर साहब से जवाब माँगा है, pic.twitter.com/lZpMzaBOeg— ANIL (@AnilYadavmedia1) November 21, 2025
அந்த மருத்துவர் வெள்ளை பனியன் மற்றும் கருப்பு டிராக் பேன்ட் அணிந்திருந்தார் என்றும், அந்த வீடியோ கந்த்லா (Kandhla) சமுதாய சுகாதார மையத்தின் மேல் தளத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணியின்போது அரசு மருத்துவமனை அறையைப் பயன்படுத்திக் காதலியுடன் நடனமாடியது குறித்து, தலைமை மருத்துவ அதிகாரி (CMO) இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மருத்துவர் அஃப்கர் சித்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
