இந்தியாவில் கிரெடிட் கார்டுகளில் வாங்கும் கடனை, குறித்த தேதிக்குள் கட்ட தவறினால் அந்த கடன்களுக்கான வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த வட்டி உச்சவரம்பு ஆண்டுக்கு 30 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது என்று கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தேசிய நுகர்வோர் நிவர்த்தி ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வங்கி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி நீதிமன்றம் தேசிய நுகர்வோர் நிவர்த்தி ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது. இதன் மூலம் இந்தியாவில் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு வட்டி விகிதம் மாற்றி அமைக்க கூடும்.

இதனால் பொதுமக்கள் அதிக கட்டணங்களுக்கு ஆளாக கூடும். ஆதலால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதோடு அதிக சுமை, அதிக வட்டி விகிதம் என்னும் தீய சுழற்சியில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, செலவு பழக்கம் மற்றும் திருப்பி செலுத்தும் திறன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகச் செலவு, கடனை திரும்பப் பெறுவதில் இருக்கும் ஆபத்து, கிரெடிட் கார்டில் பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டுகளை சரியான நேரத்தில் திருப்பதி செலுத்துவதற்கான யுத்திகளை உருவாக்குதல், வட்டி விகிதத்தின் தொடர்பான விதிமுறைகளை புரிந்து கொள்ளுதல், அதிகமாக பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவை கிரெடிட் கார்டு பயனர்கள் கையாள்வது முக்கியம்.