விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசன் வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜட்ஜஸாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு உள்ளனர். மேலும் ஆங்கராக ரக்சன், மணிமேகலை இருந்தனர். குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றி பெற்றதால் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது ஆங்கர் மணிமேகலை நிகழ்ச்சி விட்டு விலகியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மணிமேகலை,பிரியங்காவுக்கு இடையேயான மோதலால் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கூறியிருந்தார். மேலும் தற்போது அவர் youtube பக்கத்தில் வெளியிட்ட நிகழ்ச்சியில் நடந்த மோதல் பற்றிய வீடியோ மற்றும் சொம்பு வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதற்கிடையில் பிரியங்காவுக்கும் ஆதரவாக பல விஜய் டிவி பிரபலங்கள் பேசிய வீடியோக்களும் ட்ரெண்டாகி வரும் நிலையில் குக் வித் கோமாளியை தொகுத்து வழங்க போகும் அடுத்த ஆங்கர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இதற்கு விடையளிக்கும் விதமாக குக் வித் கோமாளியின் அடுத்த தொகுப்பாளராக விஜய் டிவியில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர் புகழ் தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புகழ் குக் வித் கோமாளி மூலம் சிறந்த “ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக”மக்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்றார். தற்போது வெளியாக உள்ள குக் வித் கோமாளியின் தொகுப்பாளராக ரக்சன்-புகழ் காம்போவை பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.